ஒற்றை மரத்தடி
காலி புத்தகம்
பேனாவில் மை தீர்ந்திருந்தது.
தாகம் தீர்க்க
கானல் நீரை
நோக்கி நடந்தேன்
அவளுக்காக காத்திருக்கையில்.
காலை இளம்பனி
நதியில் ஓடம்
துடுப்பு இன்றி
நெற்றியின் பொட்டை
சுற்றி வரைந்த
ஒற்றை புள்ளி கோலம்
உன் முகம்
இவற்றில் எவை ஹைக்கூ அல்ல என்று உங்களால் கூற இயன்றால் ,
உங்களுக்கு ஒரு சபாஷ்! ஹைக்கூ எழுத விதி முறைகள் உள்ளன. அறிய விழைந்தால் சுஜாதாவின் "ஹைக்கூ - ஓர் அறிமுகம்" படியுங்கள்.
( சிந்து மேனனின் முகம் போருந்தியதென எண்ணினேன்! தவிர அவரை நினைத்து எழுதவில்லை ! எழுதினாலும் தவறில்லை !)