Saturday, January 25, 2014

புலி உலாவும் சோலை (Forests where tigers roam)

(குறுந்தொகை பாடல் 237. பாலை தலைவன் கூற்று )
அஞ்சுவது அறியாது , அமர் துணை தழீஇ
நெஞ்சு நப்பிரிந்தன்று ஆயினும் எஞ்சிய,
கை பிணி நெகிழின் அஃது எவனோ நன்றும்
சேய  அம்ம , இருவாம் இடையே
மாக் கடல் திரையின் முழங்கி , வலன் ஏர்பு
கோட்  புலி வழங்கும் சோலை
எனைத்து என்று எண்ணுகோ முயக்கிடை மலைவே

பொருள் :

அஞ்சாமல் அவளைத் தழுவ
என் நெஞ்சம் விரும்பி
என்னை பிரிந்து சென்றது .
ஆனால் என்ன பயன் ?
கையால் தழுவ முடியாது .
எனக்கும் அவளுக்கும்
அதுக தூரம் .
இடையே கடல்போல் ஆரவாரிக்கும்
புலி உலவும் சோலைகள்
எத்தனை என்று எண்ணுவேன் ?


My crude English translation:

My heart left me alone sans fear,
Yearning to hug her .
What can it do, little heart,
My hands can't touch her.
Can't say how many,
Are the forests, where tigers roam,
Stand between us!


Was wondering how many forests were in TamilNadu that time ( more than 1000 years ago!)  populated with tigers.. It's sad to compare with today's tiger population in the world!

(p.s. : Read this when I was missing my wife on a Saturday evening, who is out-of-station :-(  )