தொலைவில் கடலில் அஸ்தமிக்க
செல்லும் சூரியன்
பாலைவனத்தில் பூத்த கள்ளிச்செடி
ஊர் எல்லையில் காவலில் அய்யனார் சிலை
தூரமாய் கடலில் மீன் பிடிக்கச் சென்ற படகு
நதியினில் மிதக்கும் நிலா
வெய்யிலில் திரிந்தும் கருக்காத ஒற்றை மேகம்
தூரத்தை குறிக்கும் மைல் கல்
தனிமையும் அழகோ ?
நிழற்படம் நன்றி : திரு. அனீஷ் B கிருஷ்ணன்
No comments:
Post a Comment