Monday, December 14, 2009

உண்மைகள் !

'பெரிய உண்மைகள் பரம எளிமையானவை 'என்று எதையோ ஆரம்பத்தில் உளறினேன் . பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பாரதியின் தாத்தாவும் என் தாத்தாவும் ' ஒருவரே ' என்று பின்னோக்கிய உயிர்ப் பயணத்தில் சாதாரணமாகத் தெரிந்து கொள்ள முடியாதா என்ன? இன்னும் பின்னாடி போனால் இதுவரை பிறந்ததும் ஒரே மனிதன் .... ஆயிரம் கோடி பெயர் ரூபங்களில் அவன் ... அவனே காசி . அவனே மார்டின் .. நாம , ரூப மயக்கங்கள். தனித்தனியே உயிர்ப் 'பற்றுகள்' . உலகில் யார் ஒருவர் இறந்தாலும் அது நான் தான். உயிர் வாழ்தலே காலத்தின் ஒரு தற்காலிக ஏற்பாடு தான். சாதாரண பொது புத்தியில் உணரலாமே மனிதா! ஒருவனே பிறக்கிறான். ஒருவனே இறக்கிறான். இதனால் பிறப்புக்கும், இறப்புக்கும் 'தனி' அர்த்தம் எதுவுமில்லை என்று பொது புத்தி(common sense) கொண்டே புரியலாமே! இதனையே பூனை, புலி, கரும்பு, வேம்பு, கரப்பான், கொசு, புல்லென்று, சகல உயிர் ராசிகளுக்கும் பொருத்திக் கொள்ளலாம். 'உயிர்' வெளிப்பாட்டின் எண்ணற்ற உடல் வடிவங்கள். இந்த வடிவங்களில் மயங்குவதும் முயங்குவதும் வாழ்க்கை. வடிவங்களை பெயர்களால் அடையாள படுத்திக்கொண்டு வதைப்பட்டுகொண்டிருக்கிறோம் .

நன்றி : பாதசாரி , 'மனநிழல்'
மழை, ஜூலை 2002 இதழிலிருந்து
quoted from : 'உயிரின் ரகசியம்' - சுஜாதா

2 comments:

Unknown said...

"உயிர் வாழ்தலே காலத்தின் ஒரு தற்காலிக ஏற்பாடு தான்"

மிகச் சிறப்பான கருத்து

புரிதல் நலம் பயக்கும்..... மானுட ரூபங்களுக்கு

நன்றி பல

ஹரிஷ் said...

"நாம ரூப மயக்கங்கள்......" ஆழமான் கருத்து.
"உயிர்' வெளிப்பாட்டின் எண்ணற்ற உடல் வடிவங்கள். இந்த வடிவங்களில் மயங்குவதும் முயங்குவதும் வாழ்க்கை"- உயர்வான சிந்தனை - புரிதல்.
முற்றிலும் துறந்தவன் சிந்தும் அறிவு துளிகள்.
தொடரட்டும் உங்கள் எழுத்து.