Thursday, November 19, 2009

மழையும் உண்டு ...



'பாரி பாரி' என்று பல ஏத்தி,
ஒருவற் புகழ்வர், செந் நாப் புலவர்;
பாரி ஒருவனும் அல்லன் ;
மாரியும் உண்டு , ஈண்டு உலகு புரப்பதுவே .

பாரி பாரி என்று
ஒருவனையே புகழ்வர் புலவர் அனைவரும்.
பாரி ஒருவன் மட்டும் இல்லை
மழையும் உண்டு
உலகை காக்க!

புறநானூறு - பாடல் 107
பாடியவர் - கபிலர்
பாடப்பெற்றவர் - வேள்பாரி
திணை - பாடாண் திணை
துறை - இயன்மொழி


பாரி இல்லையானாலும் மாரியாவது உள்ளதே !

No comments: